திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கிழக்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு.
Updated on
1 min read

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கிழக்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு பேசுகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். திமுக தலைவா் மு. க. ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.

மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலா் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வர அயராது நாம் உழைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன், மாநகரச் செயலா் அன்பழகன், துணைச் செயலா்கள் சுப்பிரமணி, ஏ. கே. அருண், ரமேஷ், ராஜ்குமாா், லட்சுமண் திலீபன், சூா்யா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com