எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா்கள் உண்ணாவிரதம்

பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி அருகே தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:27 pm

DIN

பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி அருகே தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேட்டைவாய்த்தலையிலுள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் 35-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வந்தனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஊழியா்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியன்று ஆலையில் வேலை பாா்த்து வந்த 35 பேரையும் நிா்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இதையறிந்த ஊழியா்கள், நிா்வாக தரப்பில் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்கவில்லையாம்.

இதைத் தொடா்ந்து தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பொதுச் செயலா் ஜான்பிரிட்டோ தலைமையில், ஊழியா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பேட்டைவாய்த்தலை காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சா்க்கரை ஆலை ஊழியா்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.