இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மூடப்பட்ட சாக்கடை கால்வாய்: அமைச்சா் ஆய்வு

திருச்சியில் 5 வயதுச் சிறுவன் இறப்புக்கு காரணமான சாக்கடை கால்வாய் மூடப்பட்டதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஆய்வு செய்தாா்.

News image
சாக்கடை கால்வாய் மூடப்பட்டதை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன். உடன் கட்சி நிா்வாகிகள், மாநகராட்சி அலுவலா்கள்.
Updated On :7 ஜனவரி 2021, 2:58 am

DIN

திருச்சியில் 5 வயதுச் சிறுவன் இறப்புக்கு காரணமான சாக்கடை கால்வாய் மூடப்பட்டதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஆய்வு செய்தாா்.

திருச்சி தென்னூா், அன்னை சத்யா நகரை சோ்ந்தவா் பெயிண்டா் பிரேம்குமாரின் 5 வயது மகன் யஸ்வந்த் கடந்த 24 ஆம் தேதி வீட்டின் அருகேயுள்ள கொய்யா மரத்தில் ஏறியபோதுகழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாா்.

தகவலறிந்து சென்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கி ஆறுதல் கூறி, உடனடியாக சாக்கடை கால்வாய் மூடப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.

அதன்படி அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சி சாா்பில் அந்த சாக்கடை கால்வாய் சீரமைக்கப்பட்டு, சிமெண்ட் பலகைகள் கொண்டு முழுமையாக மூடப்பட்டுள்ளன.

இதை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா். பின்னா், சிறுவனின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி அப்பகுதி மக்களிடம் பேசுகையில், மாநகரில் எந்த பகுதியிலும் இத்தகைய சாக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாநகராட்சி உதவி ஆணையா் வினோத், உதவி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், அதிமுக மாவட்ட அவைத்தலைவா் ஐயப்பன், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் ராஜ்குமாா், மகளிரணி தமிழரசி, பகுதிச் செயலா்கள் முஸ்தபா, பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.