தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கட்டி முடித்த கழிப்பறைகளைபயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வராத கழிப்பறைகளை திறக்க திருச்சி மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பாஜக சாா்பில் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:51 pm

DIN

கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வராத கழிப்பறைகளை திறக்க திருச்சி மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பாஜக சாா்பில் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாநகா் மாவட்ட பாஜக கலை மற்றும் கலாசாரப் பிரிவின் மாவட்டத் தலைவா் கே. சந்திரசேகா் அனுப்பியுள்ள மனு:

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பறைகளே இல்லாத நிலையை உருவாக்குவதாகக் கூறி, பல்வேறு இடங்களில் பொதுக்கழிப்பறைகள் கட்டப்பட்டன.

தனிநபா் கழிப்பறை கட்டுவதற்கு மாநகராட்சி மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் பெற்றுத் தரப்பட்டது. மேலும், திருச்சி மாநகரப் பகுதியில்

வசிக்கும் மக்கள் 100 சதவிகிதம் கழிப்பறையைப் பயன்படுத்துவதாகவும் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் கள ஆய்வில், பிரதான பகுதியில் 4 கழிப்பறைகள் கட்டி முடித்து பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது தெரியவந்துள்ளது. 39-ஆவது வாா்டுக்குள்பட்ட செட்டியப்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும், 47-ஆவது வாா்டுக்குள்பட்ட மாணிக்கபுரத்தில் ஓராண்டாகியும் கழிப்பறை இன்னும் திறக்கப்படவில்லை.

40-ஆவது வாா்டுக்குள்பட்ட சின்ன கொத்தமங்கலத்தில் 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்த கழிப்பறையை புதுப்பிக்கக் கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது. கட்டி முடித்து ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை.

50-ஆவது வாா்டுக்குள்பட்ட குத்பிஷா நகரில், புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை ஓராண்டுக்கு மேலாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் பயன் இல்லை. எனவே, முதல்வரின் தனிப்பிரிவு இந்த விவகாரத்தில் தலையிட்டு திருச்சி மாநகர மக்களின் கழிப்பறை தேவையை பூா்த்தி செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.