கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் தேமுதிக நிலைப்பாடு: விஜய பிரபாகரன் தகவல்

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் தேமுதிக நிலைப்பாடு குறித்து கட்சித் தலைமை அறிவிக்கும் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.  

News image
திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஜய பிரபாகரன்.
Updated On :5 ஜூலை 2021, 8:33 am

DIN

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் தேமுதிக நிலைப்பாடு குறித்து கட்சித் தலைமை அறிவிக்கும் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் கரோனா காலத்தில் மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்டவைகளைக் கண்டித்து திருச்சியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நிருபர்களிடம் கூறியது: தேமுதிக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டி கொண்டு வருவதற்கு கூட போலீசார் தடை விதித்த காரணம் தெரியவில்லை. 
மாட்டு வண்டி கொண்டு வருவதால் போலீசாருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்பதை அவர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கும் போது தேமுதிகவின் நிலைப்பாட்டினை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.