துறையூர்: துறையூர் அருகே சுமையேற்றும் வாகனத்தில் பெண் அழைக்க சென்ற போது வாகனகம் விபத்துக்குள்ளானதால் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
துறையூர் அருகேயுள்ள கே. கருப்பம்பட்டி கோபிநாத்தின் மகளுக்கும் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருவரங்கப்பட்டி செல்வராஜ் மகன் பாலமுருகன்(21) என்பவருக்கும் ஜூலை 7ஆம் தேதி மணமகனின் ஊரில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெண் அழைத்து வர மணமகனின் உறவினர்கள் சுமை ஏற்றும் வாகனத்தில் மணமகள் ஊருக்கு சென்றனர்.

துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விபத்தில் காயமடைந்தவர்கள்.
இவர்களில் ஆண்கள் பயணித்த வாகனம் மெய்யம்பட்டி- சேனப்பநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் வாகனம் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் திருவரங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகன் பெரியண்ணன்(57) விபத்து நிகழ்விடத்தில் உயிரிழந்தார். இவருடைய சடலம் உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது.
மேலும் அதே ஊரைச் சேர்ந்த வாகன ஓட்டுனர் கோபி(24) உள்பட காயமடைந்த 11 பேரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக துறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


