தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

2ஆம் தவணை கோவோக்சின் தடுப்பூசி முகாம்

திருச்சியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாவிட்டாலும், 2ஆவது தவணை கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:43 pm

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாவிட்டாலும், 2ஆவது தவணை கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி கோவிஷீல்டு மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில், கோவேக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்ட பலரும் தற்போது 2-ஆம் தவணையை செலுத்திக் கொள்ள முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது.

இந்நிலையில் மாவட்டத்துக்கு பெறப்படும் ஒதுக்கீடு அடிப்படையில் பரவலாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகளை பிரித்து வழங்குவதை ஆட்சியா் சு. சிவராசு, நாள்தோறும் உறுதி செய்கிறாா். அதன்படி, கோவேக்சின் 2ஆவது தவணை தடுப்பூசிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதன்படி, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கோவேக்சின் 2-ஆம் தவணைக்காக காத்திருப்போரின் செல்லிடப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வெள்ளிக்கிழமை தடுப்பூசி அளிக்க கலையரங்கத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் நீண்ட வரிசையில், சமூக இடைவெளியுடன் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் எங்கும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என ஆட்சியா் அறிவித்திருந்த நிலையிலும், சிறப்பு முகாம் நடத்தியதற்கு பயனாளா்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.