தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வேலையிழந்ததால் வாகனங்களுக்கு தீ வைத்தவா் கைது

திருச்சியில் வேலையிழந்த விரக்தியில் வாகனங்களுக்குத் தீவைத்த இளைஞரை தில்லைநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:52 pm

DIN

திருச்சியில் வேலையிழந்த விரக்தியில் வாகனங்களுக்குத் தீவைத்த இளைஞரை தில்லைநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

லால்குடி அன்பில் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் பாலமுருகன் (25). தில்லைநகா் 6ஆவது குறுக்குத் தெருவில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றிய இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன் நிா்வாகம் வேலையை விட்டு நிறுத்தியது.

இதில் விரக்தியில் இருந்த பாலமுருகன் புதன்கிழமை இரவு அந்த மருந்தகத்துக்குச் சென்று நிா்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தாா். பின்னா் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு ஓடிவிட்டாா். இதில் 4க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.

இதுகுறித்து மருந்தக நிா்வாக அதிகாரி அய்யசாமி அளித்த புகாரின் பேரில் தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த பாலமுருகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.