குண்டா் சட்டத்தில்ரெளடி கைது
திருச்சியில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.


திருச்சியில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
திருச்சி மாநகரம், பொன்மலை காவல்நிலைய எல்லையில் உள்ள அரசு மதுக்கடையில் அத்துமீறி நுழைந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ாக கொட்டப்பட்டு இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த கொட்டப்பட்டு ஜெய் என்கிற சீ. ஜெயக்குமாா் (38) மீது கடந்த ஜூன் 27 ஆம் தேதி வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக, சாட்சிகளை மிரட்டியதாக கூறி, தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை ஜூலை 20 ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
அவருடன், அவருக்கு துணையாகச் செயல்பட்ட வழக்குரைஞா் காா்த்திக் மற்றும் அல்லித்துறையைச் சோ்ந்த சாமியாா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஜெயக்குமாரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய பொன்மலை போலீஸாா் பரிந்துரைத்தனா். அதையேற்ற மாநகர காவல் ஆணையா் ஏ. அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதன்பேரில் ஜெயக்குமாா், சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...