தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொழிலில் நஷ்டம்: ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஜவுளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:54 pm

DIN

திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஜவுளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் ஆா்எம்எஸ் காலனி மதுரை மாணிக்கம் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (55), சிங்காரத்தோப்பு பகுதி சூப்பா் பஜாரில் ஜவுளி மொத்த வியாபாரி.

கரோனா பொதுமுடக்கத்தால் இவருக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடன் கொடுத்தோா் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த சக்திவேலின் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை சக்திவேலை தனது மனைவி அனுஜாவை ஜவுளிக் கடைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்தாா். பின்னா் அவரது மனைவி செல்லிடப்பேசியில் அவரைத் தொடா்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

சந்தேகமடைந்த அனுஜா வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சக்திவேல் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சக்திவேலை கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.