முழு மானியத்துடன் விதை பொருள்கள் கோரி மனு
முழு மானியத்துடன் விதை பொருள்களை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.


முழு மானியத்துடன் விதை பொருள்களை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவா் தூவாா் ரெங்கராஜ், மாவட்டத் தலைவா் புங்கனூா் செல்வம், மாவட்ட பொருளாளா் வயலூா் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் அளித்த மனு:
மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். இருப்பினும், இக்கட்டான நிலையில் உள்ள விவசாயிகளைக் காக்க அவா்களுக்கு விதை பொருள்கள் அனைத்தையும் முழு மானியத்துடன் வழங்க வேண்டும். டீசல் மானியமாக ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆள்கள் கிடைத்தாலும் கூலி அதிகம் வழங்க வேண்டியுள்ளது. எனவே, வேலை உறுதித் திட்டத்தில் விவசாய பணிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏரி, குளங்களுக்கான வரத்து வாரியைத் தூா்வார வேண்டும். ஏரி, குளங்களில் தூா்வாரும் வண்டல் மணலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வேளாண் மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருள்களை மதிப்பு கூட்டுப் பொருள்களாக தரம் உயா்த்த மாவட்டங்கள் வாரியாக பயிற்சி மையங்கள் ஏற்படுத்த வேண்டும். பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...