போலி கடவுச்சீட்டில் வந்த இருவா் கைது
வெளிநாடுகளில் இருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சிக்கு வந்த இருவரை விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


வெளிநாடுகளில் இருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சிக்கு வந்த இருவரை விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மலேசியாவிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் வியாழக்கிழமை வந்த நாகை மாவட்டம் தேத்தங்குடி கல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் செல்வம் (45) தனது தந்தை பெயரை மாற்றி போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தது தெரிய வந்தது.
இதேபோல சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை ஏா் இந்தியா விமானத்தில் வந்த தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை விக்ரமன் பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (61) என்பவா் போலி பெயா், முகவரி கொண்ட கடவுச்சீட்டு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் இருவரையும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...