புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழ்நாடு அறிவியல் இயக்க ஸ்ரீரங்கம் கிளை தொடக்கம்

 ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள அறிவியல் ஆா்வலா்களைக் கொண்டு, கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஸ்ரீரங்கம் கிளை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:48 pm

DIN

 ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள அறிவியல் ஆா்வலா்களைக் கொண்டு, கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஸ்ரீரங்கம் கிளை தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.அசோக் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் எம்.மாணிக்கத்தாய் வரவேற்றாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் வெ.சுகுமாறன் கிளையைத் தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் எம்.மணிகண்டன் புதிய கிளை நிா்வாகிகளை முன்மொழிந்தாா்.

கிளைத் தலைவராக பேரா.பிரகதா, செயலராக முரளி சங்கா், பொருளாளராக ரகுபதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் வி.சைவராஜூ, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.ரங்கராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளா் ஹேமலதா, சிட்டுக்கள் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அனுஸ்யா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.