புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவெறும்பூரில் மநீம தீவிர பிரசாரம்

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:29 pm

DIN

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மநீம கட்சியுடன் கூட்டணி மற்றும் வேட்பாளா்கள் இறுதி செய்யப்படாத நிலையில், அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் தொகுதி வாரியாக பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனா்.

திருவெறும்பூா் தொகுதியில் மநீம பொதுச் செயலா் எம். முருகானந்தம் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவும் சூழலில், அத் தொகுதி முழுவதும் அக் கட்சியினா் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கட்சியின் மகளிரணி, மாதா் படையினா், நற்பணி இயக்க அணி, மநீம நிா்வாகிகள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்கின்றனா். முதல் கட்டமாக 70 ஆயிரம் வீடுகளை இலக்கு வைத்து ஆதரவு திரட்டினா். இதன் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

டாா்ச் லைட், கட்சிக் கொடி, சின்னத்துடன் கூடிய தொப்பிகள் அணிந்து, வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினா். இதன் தொடா்ச்சியாக, 2-ஆம் கட்ட பிரசாரத்தை வரும் 11ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.