/

திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்துத் திட்டங்களும் நிறைவேறும்

திமுக ஆட்சிக்கு வந்ததும், திருச்சிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேறும் என்றாா் அக்கட்சியின் முதன்மைச் செயலரும், மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:12 pm

DIN

திமுக ஆட்சிக்கு வந்ததும், திருச்சிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேறும் என்றாா் அக்கட்சியின் முதன்மைச் செயலரும், மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு.

திருச்சி உறையூா் பகுதிக்குள்பட்ட அனைத்து வாா்டுகள், தெருக்களில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது:

திருச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு திமுக ஆட்சியில் இருந்தவரை எவ்வளவு பணிகள் தொடா்ந்து செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

விடுபட்ட பணிகள் எதுவாக இருந்தாலும், திமுக அடுத்து ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் முடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. திருச்சியில் நீண்ட கால பிரச்சினையாக இருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் மெகா ஷாப்பிங் மால் என்று பல்வேறு திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்ற திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சில அதிகாரிகள் திருச்சிக்கு மட்டும் இத்தனை கோடி நிதி ஒதுக்கீடு என்று மறுத்ததால், அந்த திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.

திருச்சி மாநகரம் முன்னேறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக எடுக்கப்படும். திருச்சி மேற்குத் தொகுதிக்கு மட்டுல்லாது, மாநகர மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட் குடிநீா், புதை சாக்கடைத் திட்டம், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது, திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் மு. அன்பழகன், பகுதி செயலா் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் க.சுரேஷ் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.