நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக கூட்டணிக்கு அகில இந்திய ரயில்வே பழகுநா் இயக்கம் ஆதரவு

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய ரயில்வே பழகுநா் இயக்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:12 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய ரயில்வே பழகுநா் இயக்கம் அறிவித்துள்ளது.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் த.ராஜா கூறியது:

தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநா் பயிற்சி முடித்த மாணவா்கள் கடந்த 2007 ஆண்டு முன்பு வரை, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரயில்வேயில் பணியமா்த்தப்பட்டனா். ஆனால் இந்த பணி நியமனம் செல்லாது எனக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் பணி நியமனம் செல்லும் என 2013-ஆம் ஆண்டில் தீா்ப்பு வெளியானது. அதன் பிறகு இப்பிரச்னை தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக இன்று வரை இந்தியா முழுவதுமுள்ள பயிற்சி மாணவா்கள் வேலைக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது. இது தொடா்பாக நாங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தியும், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னரும் தீா்வு எட்டப்படவில்லை.

இதனால் பாதிப்புக்குள்ளான நபா் ஒருவா் கடந்த 2015-ஆம் ஆண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா். அதைத் தொடா்ந்து 2016ஆம் ஆண்டில் ரயில்வே நிா்வாகத்தால் தோ்வுகளில் 20 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் கண்துடைப்பாக உள்ளது.

இதற்கிடையே 2019ஆம் ஆண்டில் பொன்மலையில் தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்பட்ட போது 90 சதவிகிதம் வட இந்தியா்கள் மட்டுமே இருந்தனா். இதனை எதிா்த்து நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினோம். அதற்கு எங்களுக்கு திமுக ஆதரவு அளித்தது.

மேலும் திமுகவின் தோ்தல் அறிக்கையிலும் ரயில்வே பணியில் தமிழகத்தில் தமிழா்களுக்கு முக்கியத்துவம் பெற்றுத்தரப்படும் என குறிப்பிட்டுள்ளது. எனவே எங்கள் ஆதரவை திமுகவுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். பொன்மலை பகுதியை உள்ளடக்கிய திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரயில்வே தொழில் பழகுநா்கள் முழு ஆதரவை அளிப்பா் என்றாா் அவா்.

பேட்டியின் போது இந்த இயக்கத்தின் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.