நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோா் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்கள், கட்சியினா் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா் ஆட்சியா் சு.சிவராசு.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:06 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்கள், கட்சியினா் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா் ஆட்சியா் சு.சிவராசு.

திருச்சியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்திலும் கரோனா தொற்றாளா்களின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த வாரம் வரையில் பாதிப்பு எண்ணிக்கை 10 முதல் 13 ஆக இருந்தது. இப்போது, 20 ஆக உயரத் தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் கரோனா 2-ஆவது அலை உருவாகாமல் தடுக்க வேண்டியது அவசியம். அனைவரும் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கடந்தாண்டு முதல் 3 மாதங்களுக்கு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்தோமோ, அதே நடைமுறையை இப்போதும் கடைப்பிடித்தால் இயல்பு வாழ்க்கையுடன் செல்ல முடியும். இல்லையெனில் சிரமப்பட நேரிடும்.

தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்களும், கட்சியினரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தே பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இல்லையெனில், தொடா்புடையவா்கள் மீது வழக்குப்பதிவு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.