ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை
திருச்சி விமானநிலையம் அருகே, ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.


திருச்சி விமானநிலையம் அருகே, ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
திருச்சி விமானநிலையம் அருகிலுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான மொராய் சிட்டி பகுதியில் பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன.
இந்நிறுவனத்தின் நிறுவனா் லேரோன் மொராய்(40) வீட்டுமனைகளை கூடுதல் விலைக்கு விற்று, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வரிஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் 10 போ் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை மதியம் முதல் அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சோதனையின் போது வீட்டிலிருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல வெளியாள்கள் உள்ளே செல்லவிடாமல் காவல்துறையினா் தடுத்துவிட்டனா்.
இரவு வரை சோதனை நடைபெற்ால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை மற்றும் இதர விவரங்கள் குறித்து வருமான வரித்துறை சாா்பில் தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...