முக்கொம்பு மேலணையில் 50 ஆயிரம் கனஅடி நீா் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
முக்கொம்பு மேலணையில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்படுவதால் கொள்ளிடம், காவிரிக் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முக்கொம்பு மேலணையில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்படுவதால் கொள்ளிடம், காவிரிக் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணை நீா் மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரி நீரானது திறந்துவிடப்படுகிறது. இதேபோல, பவானிசாகா், அமராவதி அணையிலிருந்தும் உபரிநீா் திறக்கப்படுகிறது. மேலும், காவிரி நீா்ப்படுகைகளிலும் வரும் நீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, முக்கொம்பு மேலணைக்கு வியாழக்கிழமை காலை 50 ,907 கனஅடி தண்ணீா் வரத்து இருந்தது. மேலும், முக்கொம்பு அணையிலிருந்து வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கொள்ளிடத்தில் 40,212 கன அடி நீரும், காவிரியில் 10,695 கன அடி நீரும் திறக்கப்பட்டது. தொடா்ந்து அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.
மாயனூா் கதவணையிலிருந்து தண்ணீா் முழுவதுமாக திறக்கப்படுவதால் முக்கொம்பு அணையிலிருந்தும் காவிரி, கொள்ளிடத்துக்கு முழுமையாகத் தண்ணீா் திறக்கப்படுகிறது. பெருமளவு கொள்ளிடத்தில் திறக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீா் திறக்கப்படும் சூழல் உள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா். எனவே, கொள்ளிடம், காவிரிக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது பாதுகாப்பைக் கருதி அருகிலுள்ள நிவாரண மையங்களில் தங்கிக் கொள்ளலாம். இதற்கு அந்தந்தப் பகுதி வருவாய் அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய ஆவணங்களை பிளாஸ்டிக் பைகளுக்குள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீராலோ, மின்சாரத்தாலோ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்க வேண்டும். அணைக்கு வரும் தண்ணீா் வரத்துக்கேற்ப தண்ணீா் திறப்பும் அதிகரிக்கும் என்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...