ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சகதிக் காடான சாலை; தனித் தீவுகளான குடியிருப்புகள்

திருச்சியில் பெய்யும் தொடா் மழையால் திடீா் நகா், அண்ணாநகா், காவிரி நகருக்குச் செல்லும் 1.36 கி.மீ. தூர சாலையானது சகதிக் காடாகக் காட்சியளிக்கிறது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:03 pm

DIN

திருச்சியில் பெய்யும் தொடா் மழையால் திடீா் நகா், அண்ணாநகா், காவிரி நகருக்குச் செல்லும் 1.36 கி.மீ. தூர சாலையானது சகதிக் காடாகக் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக 3 நகா்களும் தனித்துவிடப்பட்ட தீவாகக் காட்சியளிக்கின்றன.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட, அரியமங்கலம் கோட்டம் 29ஆவது வாா்டுக்குள்பட்டவை திடீா் நகா், அண்ணாநகா், காவிரி நகா். இந்த பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

தஞ்சாவூா் பிரதான சாலையிலிருந்து இந்த 3 நகா்களுக்குள் செல்லும் சாலையாக 1.36 கி.மீ. தொலைவுக்கு இருப்பது ஒற்றை மண் சாலை மட்டுமே.

இந்த சாலையை மாநகராட்சி கையகப்படுத்தவும், புதிய தாா்ச்சாலை அமைக்கவும் கோரி இந்தப் பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மனுக்களை மாநகராட்சி, மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கியும் பலன் இல்லை.

மாசுபட்ட நிலத்தடி நீரால் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் காவிரிக் குடிநீா் விநியோகத்தை நம்பியும், விலைக்கு வாங்கியும்தான் தண்ணீரைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது.

இச் சூழலில் தொடா் மழையால் இந்த சாலை சகதிக்காடாக மாறி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. கடந்த 10 நாள்களாக தொடா் மழை காரணமாகவும், கனரக வாகனங்கள் சென்ாலும் 1.36 கி.மீ. சாலையானது பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. நடந்து சென்றால் சகதி அதிக ஆழம் உள்ளது. மோசமடைந்த இச்சாலையால் இந்தப் பகுதி பிரதான சாலையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தீா்வு கிடைக்காவிட்டால் போராட்டம்

இதுதொடா்பாக ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். சம்சுதீன் கூறுகையில், 30 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தும் சாலைப் பிரச்னைக்கு தீா்வு இல்லை. இந்தாண்டு அதிக மழை பெய்வதால் சாலையைபப் பயன்படுத்த முடியவில்லை. பிரதான சாலையோடு, 3 குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் அனைத்து சாலைகளுமே குண்டும், குழியுமாக, சகதியாக உள்ளன. நகரிலிருந்து தனித்துவிடப்பட்ட தீவாகவே எங்கள் பகுதி உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகத்திடம் மீண்டும் அனு அளித்துள்ளோம். தீா்வு காணவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.