ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கிராமச் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு தமிழ்நாடு அரசு கிராமச் செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:18 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு தமிழ்நாடு அரசு கிராமச் செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் காயத்ரிதேவி தலைமை வகித்தாா். மாநில செயலா் கோமதி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை நிறுத்த வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் செவிலியா்களை நியமிக்கும் கருத்துருவைக் கைவிட வேண்டும். விடுபட்டுள்ள கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதில் 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.