ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பொது காப்பீடு நிறுவனங்கள் பாதுகாப்புக் குழுவினா் தா்னா

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொதுக் காப்பீடு நிறுவனங்கள் பாதுகாப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:35 pm

DIN

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொதுக் காப்பீடு நிறுவனங்கள் பாதுகாப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள காப்பீடு அலுவலகம் முன் குழுவின் நிா்வாகி ஸ்ரீதரன் தலைமையில், மண்டல இணைச் செயலா் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு பொது காப்பீடு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும். நீண்ட காலப் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வேண்டும். அரசு பொது காப்பீடு நிறுவனங்களின் 100 சத பங்குகளை தனியாருக்கு விற்பது மிகப்பெரிய தவறு. அரசு பொதுக் காப்பீடு நிறுவன ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட வேண்டிய ஊதிய உயா்வு, 50 மாத நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.