மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி சேசலூரில் உயிரிழந்த மூதாட்டி உடல், திங்கட்கிழமை பெரியாற்றில் இறங்கி முழங்கால் அளவு தண்ணீரில் உறவினர்கள் எடுத்து சென்றனர். மேம்பாலம் மற்றும் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமரவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் சேசலூர். இங்கிருந்து பாலப்பட்டி வழியாக வடக்கு அம்மாப்பட்டி, தேக்கமலை கோயில் ஆகியவற்றுக்கு பெரியாறு வாய்க்கால் வழியை தான் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். வாய்க்கால் பகுதிக்கு முன்னதாகவே நின்று விட்ட தார் சாலைக்கு பின் ஒற்றை அடி பாதையாக கால்வாய்க்கு சென்று, பின் கால்வாய் கடந்து சேறும் சகதியுமான கற்கள் நிறைந்த கரட்டு மேட்டில் ஏறி செல்ல வேண்டும்.
நடை பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவசர தேவைகளுக்கு இருச்சக்கர வாகனங்களை கூட பயன்படுத்த முடியாத நிலை என அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக திங்கட்கிழமை உயிரிழந்த பழனிச்சாமி மனைவி வெள்ளையம்மாளுக்கு, இறுதி சடங்குகள் செய்ய வந்த உறவினர்களும், ஊர் மக்களும் வாய்க்காலில் முழங்கால் அளவு தண்ணீரில் தட்டுதடுமாறியே கடந்து சென்றனர். அதனைத்தொடர்ந்து மயானத்திற்கு செல்ல வெள்ளம்மாளின் உடலை உறவினர்கள் வாய்க்காலில் முழங்கால் அளவு தண்ணீரிலே கடந்து சென்று, பின் ஒற்றையடி பாதையில் பயணித்து மயானத்திற்கு சென்றனர்.
இதுகுறித்து அரசியல் பிரமுகர்களிடமும், ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் பலமுறை மனு அளித்தும் யாரும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், இப்பகுதியில் முழுமையான சாலையும், வாய்க்கால் பகுதிக்கு மேம்பாலமும் அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? முதல் செயல்திட்டம்!

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

