சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மகாளய அமாவாசை: அம்மாமண்டபத்தில் நாளை தடை

தர்ப்பணம், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அம்மாமண்டபத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மகாளய அமாவாசை: அம்மாமண்டபத்தில் நாளை தடை

Updated On :28 ஜனவரி 2024, 9:48 am IST

திருச்சி: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அம்மாமண்டபத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்குவது அம்மாமண்டபம். இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி வழங்கவும் தினந்தோறும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து அம்மாமண்டபம் காவிரிக் கரையில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள வருகை தருவர். மண்டபத்தில் இடமின்றி காவிரியாற்றில் கரைகளில் அமர்ந்து புரோகிதர்கள் பலரும் பொதுமக்களுக்கு சேவை அளிப்பது வழக்கம். அமாவாசை தினங்களில் மக்கள் நெரிசல் அதிகரித்து காணப்படும்.

மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் பூஜைகள் நடத்தி, புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இந்த தினங்கள் உகந்ததாகும். ஆனால், இந்தாண்டு மகாளய அமாவாசையில் அம்மாமண்டபத்தில் தர்ப்பணம் அளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழக அரசு அறிவித்த தடை உத்தரவு வரும் 31ஆம் தேதி  வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அக்.6ஆம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மாமண்டபத்தில் மக்கள் கூடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

பொதுமக்கள் யாரும் அம்மாமண்டபத்துக்கு வர வேண்டாம். காவிரி ஆற்றின் கரைப் பகுதிளிலும் மக்கள் கூட வேண்டாம். கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.