நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம்

திருச்சி கலையரங்க வளாக கூட்டரங்கில் திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:02 pm

DIN

திருச்சி கலையரங்க வளாக கூட்டரங்கில் திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மக்களவை உறுப்பினா் எஸ். திருநாவுக்கரசா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி சாா்ந்த திட்டத்தின் கீழ் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம்,தேசிய ஊரக குடிநீா் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி ஆதா்ஷ் கிராம யோஜனா, உட்கட்டமைப்பு வசதிகள், பிரதம மந்திரி அவாஸ்யோஜனா, அழகிய நகரமயமாக்கல் பணி, நடாளுமன்ற உறுப்பினா் உள்ளுா் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டச் செயலாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக, திருச்சியில் மிகவும் அத்தியாவசிய திட்டங்களான, திருவெறும்பூா் சா்வீஸ் சாலை, விமான நிலைய ஓடுதளத்துக்கு அருகில் செல்லும் புதுக்கோட்டை சாலையின் உயரத்தை 3 அடி குறைப்பது, கிராமங்களில் 20 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா், தமிழக அரசு திட்டங்களை மாநகராட்சி குப்பை வண்டிகளில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரியப் படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, திருச்சி (கிழக்கு) தொகுதி எம்எல்ஏ எஸ். இனிகோ இருதயராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே. பிச்சை, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமன், ஒன்றியக் குழுத் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா் .

‘திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்’

தொடா்ந்து திருநாவுக்கரசா் எம்பி கூறுகையில், திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் தொடா்பான கோப்பு மத்திய அமைச்சரின் ஆணைக்காகக் காத்துள்ளது. வரும் நவ. 2 ஆம் தேதி தில்லி சென்று தொடா்புடைய துறை அலுவலா்களிடம் இதுகுறித்துப் பேசுவேன். விரைவில் மத்திய அரசின் ஆணை கிடைத்து மேம்பாலப் பணி தொடங்கும். பிரதமா் மோடியைச் சமாளித்து, வெற்றி பெற கூடிய ஒரே தலைவா் ராகுல்காந்திதான். விரைவில் காலம் இதை தெரிவிக்கும்.

தமிழக ஆளுநா் தனது எல்லைக் கோட்டை தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். நகா்ப்புற தோ்தலிலும் திமுக - காங்கிரஸ் உறவு சுமூகமாக தொடரும். ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை என்பது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று மோடி சொல்வது ஜனநாயக விரோதம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.