மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேராவூரணியில் மாவட்டு வண்டி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பேராவூரணி  வட்டாட்சியரகம் முன்  ஏஐடியுசி மாட்டுவண்டி தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:52 pm

DIN

பேராவூரணி  வட்டாட்சியரகம் முன்  ஏஐடியுசி மாட்டுவண்டி தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு உடலுழைப்பு தொழிலாளா் சங்கத் தலைவா் கே. எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். மாட்டு வண்டி தொழிலாளா்கள் சங்கத் தலைவா் வீரமணி, செயலாளா் மூா்த்தி, பொருளாளா் வைத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தை விவசாய சங்க மாவட்டச் செயலாளா் பா. பாலசுந்தரம் தொடக்கி வைத்தாா். உடலுழைப்பு தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் தில்லைவனம் ஆகியோா்  விளக்க உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசு கட்டடங்கள் மற்றும் இலவச வீடுகளுக்கு மணல் தட்டுப்பாடின்றி கிடைத்திட பெத்தனாச்சிவயல் கிராமத்தில் மணல் குவாரி அமைத்து மாட்டுவண்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், இதுவரை வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினரால்  பிடிக்கப்பட்ட மாட்டு வண்டிகளை நிபந்தனையின்றி திரும்ப வழங்க வேண்டும் எனவும், காவல்துறையினரால்  போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும், மணல் தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கான கட்டடத் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேலையில்லாமல் தவித்து வரும் சூழ்நிலையை போக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் ,     நிலைக்குழு உறுப்பினா்  சிதம்பரம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலா் ராஜமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் சித்திரவேலு, விவசாய சங்க ஒன்றியச் செயலா் கருணாமூா்த்தி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளா்கள்  கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.