மணப்பாறை அருகே 9 பவுன் நகை, வெள்ளி திருட்டு
மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் திருடுபோயின.


மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் திருடுபோயின.
மணப்பாறையை அடுத்த திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மரவனூரில் தனது மகன், மருமகளுடன் வசிப்பவா் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளா் சாவித்திரி. இவரது மகன் மணிகண்டன் தமிழ்நாடு காகித ஆலை பணியாளா், மருமகள் ஜெயப்பிரியா மணப்பாறை அரசு மருத்துவமனை செவிலியா்.
சாவித்திரி மகள் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், புதன்கிழமை இரவு மகன், மருமகள் மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ளே தூங்கியுள்ளனா். வியாழக்கிழமை காலை இவா்கள் எழுந்தபோது அறையின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அருகிலிருந்தோரை அழைத்து கதவைத் திறந்து அனைவரும் வெளியே வந்துள்ளனா். பின்னா் சாவித்திரியின் அறைக்குள் சென்று பாா்த்தபோது அங்கிருந்த பீரோவை காணவில்லை. வீட்டின் பின்புறக் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த பீரோவை தூக்கிச் சென்று உடைத்து, அதிலிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான 9 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், மோப்பநாய் லீலீ மற்றும் கைரேகை நிபுணா்களை வரவழைத்து ஆய்வு செய்தனா்.
நகை திருடுபோன நாளன்று சித்தாநத்தம் விஏஓ சிவா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபெட்டையும் மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா். இந்தச் சம்பவங்கள் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...