
மணப்பாறை: மணப்பாறை அருகே 68 வயது மூதாட்டியிடம் 7.5 சவரன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர் நல்லூச்சாமியின் மனைவி பாப்பு. 68 வயதான மூதாட்டி பாப்பு, தனது மகன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். வழக்கம்போல் விடியற்காலை வீட்டின் முன் உள்ள காலி திடலில் காலைக்கடனுக்காக மூதாட்டி சென்றுள்ளார்.
அப்போது, அருகில் முட்புதரில் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியை நெருங்கி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். பின்னால் ஆள் வருவதை சுதாரித்து திரும்பிய மூதாட்டி அந்த இளைஞரின் மேல்சட்டை இறுக்கப்பற்றிக் கொண்டு கூச்சலிட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் யாரும் வராத நிலையில், மூதாட்டியிடமிருந்து கழுத்திலிருந்த 7.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்து அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் சு.கருணாகரன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் தங்கச் சங்கிலி பறித்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







