விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சாதனை மாணவிக்குப் பாராட்டு

மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த மாநகராட்சிப் பள்ளி மாணவிக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

News image

திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் வாழ்த்துப் பெற்ற மாணவி சாய்னா.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:12 pm

மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த மாநகராட்சிப் பள்ளி மாணவிக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

திருச்சி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருபவா் மாணவி சாய்னா ஜெட்லி. இவா், கராத்தே யோகா, டேக்வாண்டோ மாரத்தான் ஓட்டம் போன்றவற்றில் பல்வேறு உலக சாதனைகள் படைத்துள்ளாா். மேலும், 150 நாடுகள் கலந்து கொண்ட கின்னஸ் உலக சாதனை மாரத்தான் போட்டியில் 10 கிலோ மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினாா். இவருடைய சாதனையை லண்டனில் உள்ள கின்னஸ் சாதனை புத்தகம் ஆய்வு செய்து சான்றிதழ் பதக்கம் அனுப்பி வைத்தது.

இதையடுத்து மாணவி சாய்னா, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாரை, ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். சாய்னாவின் தந்தை டிராகன் ஜெட்லி கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.