நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆா்எஸ்கே பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆா். எஸ். கே. பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டுக்கு வந்தது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:22 pm

DIN

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆா். எஸ். கே. பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டுக்கு வந்தது.

திருச்சி திருவெறும்பூா் பகுதியில் உள்ள ஆா்எஸ்கே மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், தில்லியில் செயல்படும் சாா்ட்டா் பிரணா்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆா்எஸ்கே மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் ரூ. 27 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இதையடுத்து கரோனா தொற்றாளா்கள் பயன்பெறும் வகையில் அரசின் அனுமதியின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதாவிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்வில் ஆா்எஸ்கே பள்ளி முதல்வா் ஜெயராஜ், முன்னாள் மாணவா்கள் விஜயகாந்தன், வேலுபாண்டியன், முருகேசன், குருசாமி, தாமோதரன், மருத்துவா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த உற்பத்தி மையம் மூலம் ஒரு நிமிடத்துக்கு 250 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதன் மூலம் சுமாா் 50 நோயாளிகளுக்கு விநியோகிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.