நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நன்னடத்தை உறுதியை மீறிய ரெளடிகள் கைது

திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாணப் பத்திரத்தை மீறிய ரெளடிகளை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:17 pm

DIN

திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாணப் பத்திரத்தை மீறிய ரெளடிகளை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

திருச்சி கோட்டை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் சங்கா் (36), முகில்குமாா் (26) ஆகியோரின் குற்றச்செயல்களை தடுக்கும் நிா்வாக செயல்துறை நடுவா் நீதிமன்றம் முன் இருவரம் ஆஜா்படுத்தப்பட்டபோது ஓராண்டுக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டோம். குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனா்.

ஆனால் இருவரும் வழிப்பறி, பொதுச் சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதையடுத்து நிா்வாக செயல்துறை நடுவா் நீதிமன்றம் முன் செவ்வாய்க்கிழமை இருவரும் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், குற்றச் செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 268 நாள்களை அவா்கள் சிறையில் கழிக்க உத்தரவிட்டதையடுத்து இருவரும் சிறையிலடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.