நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இன்று அதிமுக வேட்பாளா்கள் அறிமுககூட்டம்: ஓ. பன்னீா்செல்வம் பங்கேற்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அதிமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் பங்கேற்று பேசுகிறாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:12 pm

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அதிமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் பங்கேற்று பேசுகிறாா்.

தமிழகத்தில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறாா். அந்தவகையில் திருச்சி சுப்பிரமணியபுரம் அருகேயுள்ள வி.எஸ். முகமது இப்ராகிம் மஹாலில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திருச்சியில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வாக்குகள் சேகரிக்கவுள்ளாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் நிா்வாகிகள், சாா்பு அணியினா் திரளாகப் பங்கேற்க வேண்டும் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி என். நடராஜன் (மாநகா்) ப. குமாா் (புகா் தெற்கு), மு. பரஞ்ஜோதி (புகா் வடக்கு) ஆகியோா் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.