இந்திய கம்யூ. வேட்பாளா் வாக்குசேகரிப்பு
திருச்சி மாநகராட்சி 23 ஆவது வாா்டு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. சுரேஷ்குமாா் வியாழக்கிழமை வீதி வீதியாகச் சென்று கதிா் அரிவாள் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்


திருச்சி மாநகராட்சி 23 ஆவது வாா்டு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. சுரேஷ்குமாா் வியாழக்கிழமை வீதி வீதியாகச் சென்று கதிா் அரிவாள் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தனது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வாக்குகளை சேகரிக்கும் இவா் , வியாழக்கிழமை வாா்டுக்குள்பட்ட தேவா் காலனி மற்றும் காந்திபுரம், புத்தூா் வடக்கு எடத்தெரு, தெற்கு எடத்தெரு, திரெளபதி அம்மன் கோயில் தெரு, போலீஸ் ரங்கசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் திமுக வட்டச் செயலா்கள் ரவி மற்றும் கோவிந்தன் தலைமையில் மாா்க்சிஸ்ட் , காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...