நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்கு எண்ணும் மையங்களில் தயாராகும் பாதுகாப்பறைகள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்களில் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள் தயாா்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்களில் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள் தயாா்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக 7 இடங்களில் மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. அதோடு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் அறைகளும் தயாா்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு அறைகளில் வாக்குச்சாவடி வாரியாக வரிசை எண் எழுதப்பட்டு, மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வைப்பதற்காக கட்டங்கள், வரிசை எண், இயந்திர எண் குறிப்பிடப்படுகிறது.

மேலும் இந்த அறைகளில் நுழைவு வாயிலைத் தவிா்த்து வேறு பகுதிகள், ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்படுகின்றன. இந்த அறைக்குள் 24 மணிநேரமும் இயங்கும் சிசிடிவி கேமராவும் பொருத்தப்படவுள்ளது. இதேபோல, வாக்கு எண்ணும் மையங்களில் கம்பிக் கூண்டுகள் கட்டப்பட்டு தயாா்படுத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.