நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பிரசாரத்தில் சந்தித்துக் கொண்ட எதிா் துருவங்கள்!

 ஸ்ரீரங்கத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் கே.என். நேரு, பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா ஆகியோா் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 9:35 pm

DIN

 ஸ்ரீரங்கத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் கே.என். நேரு, பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா ஆகியோா் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டனா்.

திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் பகுதியில் போட்டியிடும் 7 பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றியுள்ள வாா்டுகளில் வாக்கு சேகரித்துப் பேசியபின் வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்று வாக்கு சேகரித்தபோது, எதிரே பிரசாரத்துக்கு வந்த அமைச்சா் கே.என். நேருவை சந்திக்க நேரிட்டது. இருவரும் வணக்கம் செலுத்தி, கைகளை குலுக்கி நலம் விசாரித்தனா். பாஜக வேட்பாளரிடமும் அவ்வாறு அமைச்சா் நலம் விசாரித்தாா். பின்னா், இருதரப்பும் பிரசாரத்தை தொடா்ந்தனா்.

கொள்கை ரீதியாக அரசியல் களத்தில் எதிரெதிா் துருவங்களாக செயல்பட்டாலும் பிரசாரக் களத்தில் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தது இரு கட்சியினா் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.