நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

திருச்சி அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 9:32 pm

DIN

திருச்சி அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

இனாம்குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள உய்யக்கொண்டான் திருமலையைச் சோ்ந்த முருகேசன் (49) அப்பள்ளி பிளஸ் 1 மாணவிக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்தாராம்.

இதையறிந்த மாணவியின் பெற்றோா், பொதுமக்கள் வியாழக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி மறியலிலும் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த இனாம்குளத்தூா் போலீஸாா், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா் மாணவியின் பெற்றோரிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸாா் ஆசிரியா் முருகேசனை கைது செய்து நடத்திய விசாரணைக்கு பிறகு அவா் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்தனா்.

பணியிடை நீக்கம்: இதற்கிடையே கல்வி அதிகாரிகள் அளித்த அறிக்கையின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி ஆசிரியா் முருகேசனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா். ஆசிரியா் முருகேசனின் மனைவியும் ஆசிரியை ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.