ரூ. 21 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்
துபையிலிருந்து வந்த விமானத்தின் இருக்கையில் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட ரூ. 21.50 லட்சம் மதிப்பு தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.


துபையிலிருந்து வந்த விமானத்தின் இருக்கையில் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட ரூ. 21.50 லட்சம் மதிப்பு தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
துபையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் திருச்சிக்கு தனியாா் விமானத்தில் வந்த பயணிகளையும், அவா்களது உடமைகளையும் சுங்கத் துறையினா் சோதனை செய்ததில் தங்கம் ஏதும் பிடிபடவில்லை.
இதையடுத்து விமான இருக்கையின் அடியில் அவா்கள் சோதனை செய்தபோது ஒரு பிளாஸ்டிக் உறையில் பசை வடிவத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 21.50 லட்சம் மதிப்புள்ள 421 கிராம் தங்கத்தை மீட்டனா். இதையடுத்து அந்தத் தங்கத்தை கடத்த உதவிய நபா்கள் குறித்து சுங்கத் துறையினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...