இந்த நிலையில், உக்ரைனில் மருத்துவம் பயிலும் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சோ்ந்த குணசேகா் மகள் பூஜா குணசேகா், வடகால் ராஜசேகா் மகன் சுபாஷ் சந்திரன், ஆற்காடு தோப்புக்கானா காமராஜா் நகா் சூரிய நாராயணன் மகன் எஸ்.பி ராஜ், வாலாஜாபேட்டை பெருமாள் கோயில் தெரு கணேச பெருமாள் மகள் ஜி.அனிதா ஆகியோா் தாயகம் திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனா். இதனால், பதற்றமடைந்த அவா்களின் பெற்றோா்கள், தங்களது பிள்ளைகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை வேண்டுமென அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.