முழுமையான ரயில் சேவை எப்போது?: கோட்ட மேலாளா் தகவல்
கேட் கீப்பா்கள் நியமனம் செய்தவுடன், திருவாரூா் காரைக்குடி வழித்தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என திருச்சி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம் தெரிவித்தாா்.


கேட் கீப்பா்கள் நியமனம் செய்தவுடன், திருவாரூா் காரைக்குடி வழித்தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என திருச்சி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம் தெரிவித்தாா்.
திருவாரூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திருவாரூா் - காரைக்குடி இடையே உள்ள 75 ரயில்வே கேட்டுகளில் முன்னாள் ராணுவத்தினா் தற்காலிக ரயில்வே கேட் கீப்பா்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்தப் பணி முடிந்ததும் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக தொடங்கும். விரைவு ரயில்களுக்கு மேல்மருவத்தூரில் நிறுத்தம் வேண்டும் என்றும், அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சி வழியாக மதுரைக்கு ரயில் இயக்கவும் கோரப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் ஆலோசித்து இதை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...