ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருச்சி அருகே 13 கடைகளில் திருட்டு

திருச்சி அருகே அடுத்தடுத்த 13 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:58 pm

DIN

திருச்சி அருகே அடுத்தடுத்த 13 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்றனா்.

திருவெறும்பூா் காவல் நிலையம் அருகே கூத்தைப்பாா் பேரூராட்சிக்குச் சொந்தமான பழைய பேருந்து நிலையப் பகுதியில் சுமாா் 100 கடைகள் உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை இரவு இங்குள்ள மின்சாதன விற்பனை கடை, பிரிண்டிங் பிரஸ், இருசக்கர வாகனப் பழுது நீக்கும் கடை, பேட்டரி கடை உள்ளிட்ட 13 கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் உள்ளே இருந்த பணம், பொருள்களைத் திருடிச் சென்றனா்.

தகவலறிந்து வந்த திருவெறும்பூா் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த பகுதியில் 24 மணி நேரமும் கிடைக்கும் மதுவால் மதுபிரியா்களின் வருகை எப்போதும் உள்ளதாலும், போதிய வெளிச்சமின்மையாலும் சமூக விரோதிகள் இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அப்பகுதி கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா். இந்தப் பகுதியில் இருந்து காவல் நிலையம் சுமாா் 200 மீட்டா் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.