தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட டிராக்டர் மூலமாக விவசாயிகள் திருச்சி நெ.1 டோல்கேட்டில் இருந்து சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சரிடம் அளிக்க இன்று புறப்பட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் டிராக்டரில் உடன் செல்ல தயாராக இருந்த விவசாயிகள் அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.