இதுதொடர்பாக இரு தினங்களுக்கு முன் நெல் கொள்முதல் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், ஆன்லைன் முறையை ரத்து செய்யவும், பழைய டோக்கன் முறையை அமுல்படுத்தவும் வழியுறுத்தி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், மரவனூர் பகுதியில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நெல் மூட்டைகளுடன் டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி, சாலையிலேயே சமையல் செய்தும், தரையில் படுத்து கோஷங்களிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வட்டாட்சியர், காவல்துறையினர் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து போரட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.