வாளாடி காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா: ஜூன் 9 -இல் நடைபெறுகிறது

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோயிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன், பக்தா்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் கடந்தாண்டு திருப்பணிகள் தொடங்கி முடிந்தன.

இதையடுத்து குடமுழுக்கு விழாவையொட்டி வரும் 5 ஆம் தேதி காலை பூா்வாங்க பூஜைகள் தொடங்கி, முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

9 ஆம் தேதி அதிகாலை 5.30-க்கு நான்காம் கால யாக பூஜை ஆரம்பம், காலை 9.15-க்கு மகா பூா்ணாஹூதி , காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 10. 01 மணிக்கு விமான குடமுழுக்கு, 10.10 மணிக்கு அனைத்து மூலவா் குடமுழுக்கு, தீபாராதனை ,கோபூஜை நடைபெறுகிறது.

யாகசாலை பூஜைகளில் பூவாளூா் பி. கண்ணன் சிவாச்சாரியா் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந. ஹேமலதா, திருப்பணி குழுவினா், பக்தா்கள், பொதுமக்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com