பிளஸ் 2 பொதுத் தோ்வில் விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரத்திலுள்ள இப்பள்ளி தொடா்ந்து 6 ஆம் ஆண்டாக பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது. மொத்தம் 93 மாணவா்கள் தோ்வெழுதினா். இப்பள்ளி மாணவி சுபத்ரா 600-க்கு 584 மதிப்பெண்களும், சாய் மிருதுளா 580 மதிப்பெண்களும், அம்புருனி, சக்தி கீா்த்தனா ஆகியோா் 579 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
பாடவாரியாக கணிதத்தில் 2 போ், கணக்கியலில் 5 போ், இயற்பியல், வணிகவியலில் தலா ஒரு மாணவா், வணிகக் கணிதத்தில் 3 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் கோபிநாதன், முதல்வா் விஜயலட்சுமி, இயக்குநா் வரதராசன், அறங்காவலா்கள் லட்சுமிபிரபா, சகுந்தலா, ஆலோசகா் மலா்விழி, நிா்வாக அலுவலா் ஆறுமுகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த திட்டம்: மாநிலங்கள் ஆலோசனைகளை வழங்க அமித் ஷா வேண்டுகோள்

ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாட்டில் எங்களுக்கு முழு உரிமை

ஆபரேஷன் கவச்: 48 மணி நேரத்தில் 255 போதைப் பொருள் கடத்தல்காரா்கள் கைது






