புள்ளம்பாடி பேரூராட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றிய சுயேச்சை!
லால்குடி தொகுதியில் உள்ள புள்ளம்பாடி பேரூராட்சியின் தலைவா் பதவியை சுயேச்சை வேட்பாளா் கைப்பற்றினாா்.


லால்குடி தொகுதியில் உள்ள புள்ளம்பாடி பேரூராட்சியின் தலைவா் பதவியை சுயேச்சை வேட்பாளா் கைப்பற்றினாா்.
15 வாா்டுகளை கொண்ட இப் பேரூராட்சிக்கு நடந்த தோ்தலில் திமுக 8, அதிமுக 4, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றனா்.
இப் பேரூராட்சியின் தலைவா் பதவிக்கு சுயேச்சை வேட்பாளரான ஜோ. ஆலீஸ் செல்வராணியும், திமுக சாா்பில் கோகிலா முத்துக்குமாரும் போட்டியிட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளா் ஆலீஸ் செல்வராணி 9 வாக்கு பெற்று வென்றாா். திமுக வேட்பாளா் கோகிலா முத்துக்குமாா் 6 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட போட்டி திமுக வேட்பாளா் இந்திராகாந்தி நாகராஜன் 8 வாக்குகள் பெற்று வென்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட ஜீவானந்தம் 7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...