பொன்னமராவதி அருகேயுள்ள அரசமலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை மற்றும் பனையப்பட்டி நலம் கிளீனிக் இணைந்து நடத்திய இந்த முகாமில், பொதுமக்களுக்கு இருதய
பரிசோதனை, மூட்டு வலி பரிசோதனை, இடுப்பு வலி மற்றும் பொது மருத்துவச்
சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் மருத்துவக் குழுவினரால் வழங்கப்பட்டது.
அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலரும், தமிழக முன்னாள் வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே. வைரமுத்து அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற இந்த முகாமுக்கு முத்து மீனாட்சி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பெரியசாமி முன்னிலை வகித்தாா். முகாம் ஏற்பாடுகளை பொன்னமராவதி அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் அரசமலை முருகேசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினா் குழிபிறை பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.
முகாமில், பொன்னமராவதி கிழக்கு ஒன்றியச் செயலா் காசி கண்ணப்பன், தெற்கு ஒன்றியச் செயலா் கல்லம்பட்டி முத்துக்காளை, தெற்கு மாவட்ட வா்த்தக அணி செயலா் மாரிமுத்து, நகரச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

