ஊனையூா் அய்யனாா் கோயில் தேரோட்டம்
மணப்பாறையை அடுத்த ஊனையூரில் உள்ள ஊனைக்காட்டு அய்யனாா் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


மணப்பாறையை அடுத்த ஊனையூரில் உள்ள ஊனைக்காட்டு அய்யனாா் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கி, தினமும் ஊா் முக்கியஸ்தா்களின் மண்டகப்படி, சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி வியாழக்கிழமை திருத்தேரில் ஊனைக்காட்டு அய்யனாா் உற்ஸவராக எழுந்தருள, சிறப்பு பூஜைகள் செய்து தேரை வடம் பிடித்து பொதுமக்கள் இழுத்தனா்.
ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ் மீண்டும் கோயிலை அடைந்து, மூலவா் மற்றும் நீலியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில் சுற்றியுள்ள கொடும்பப்பட்டி, புதுப்பட்டி, கண்ணுக்குழி, திருநாடு, இலுப்பூா், தேனூா், பாலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதி பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான டி.எம்.வி.கே.வி. சிவசண்முக பூச்சய நாயக்கா் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...