திருச்சி கேண்டீனில் முறைகேடா? முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் முறைகேடு நடப்பதாக கூறி முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கேண்டீனில் முறைகேடா? முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: திருச்சி ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் முறைகேடு நடப்பதாக கூறி முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் 117 பிரதேச ராணுவ முகாம் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஆகியன உள்ளன. இந்த வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு கேண்டீன் இயங்கி வருகிறது. 

இதில், முன்னாள் ராணுவத்தினர் சலுகை விலையில் பொருட்களை வாங்கி செல்லலாம். இதனால் இங்கு மாதத்தின் தொடக்க நாள்களில் கூட்டம் அலை மோதுவது வழக்கம். இந்நிலையில் இந்த கேண்டீன் நிர்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் கேண்டீன் முன்பு இன்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கேன்டீன் மேலாளர் உதவியுடன், ஊழியர்கள் முறைகேடாக, முன்னாள் ராணுவத்தினருக்காக வரும் பொருட்களை மோசடியாக எடுத்து சென்று வெளிச்சந்தையில்  விற்று விடுகின்றனர். அதன் பின்னர் அந்த பொருட்களை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். 

சட்டவிரோதமாக செயல்படும் கேண்டீன் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது விடப்பட்டுள்ள கேண்டீன் ஏலத்தை ரத்து செய்து உரிய முறையில் விசாரணை செய்து புதிய ஏலம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், ராணுவ குழுமத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், ஆகிய ஊர்களில் உள்ள கேண்டீன்களின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். முன்னாள் ராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தினால் திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com