ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி கோரி மனு
துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி கோரி திருச்சியில் உள்ள மத்திய தொழிலாளா் நல அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது


துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி கோரி திருச்சியில் உள்ள மத்திய தொழிலாளா் நல அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவெறும்பூா் வட்டம் நவல்பட்டு பகுதியில் உள்ள துப்பாக்கித் (ஓஎப்டி) தொழிற்சாலையில் துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தோரை புதிய ஒப்பந்த நிறுவனமானது நீக்கிவிட்டு புதிய தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியது. இதையடுத்து தங்களை மீண்டும் பணிக்கு சோ்க்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.
இந்நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பாஜக மாவட்ட துணைத் தலைவா் இந்திரன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மத்திய தொழிலாளா் நல அமலாக்க அலுவலா் கே. ரவியைச் சந்தித்து, இளநிலை அலுவலா் என். ஆன்ட்ரூஸ் முன்னிலையில் மனு அளித்தனா். பாஜக திருச்சி மாவட்ட தெற்கு ஒன்றியத் தலைவா் முருகேசன், நகா்மன்ற இளைஞரணிச் செயலா் ராம்கி மற்றும் தொழிலாளா்கள் பலா் உடனிருந்தனா்.
=
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...