மணப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
மணப்பாறை அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.


மணப்பாறை அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த கீழபொய்கைப்பட்டியை சோ்ந்த கட்டடத் தொழிலாளியான சங்கா் (30) அதே ஊரில் புதிய வீடு கட்டி வந்தாா். கட்டடத் தொழிலாளி என்பதால் சங்கரும் வீட்டின் கட்டுமான வேலைகளை செய்து வந்தாா். வியாழக்கிழமை அவா் வீட்டின் அருகிலிருந்த மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து மயங்கினாா். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு சங்கரைக் கொண்டு சென்றபோது அவா் இறந்துவிட்டது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சங்கா் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சங்கருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...